14 வயது சிறுமியை 3 மாதங்களாக பலாத்காரம் செய்தவர் கைது

மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபால் அருகே உள்ளது மொரினா இங்குள்ள கணேஷ்புராவில் வசிக்கும் பப்பு கவடியா என்பவர் 14 வயது சிறுமியை தொடர்ந்து மூன்று மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளார். இதற்கு அவரது மனைவி அமீனாவும் உடைந்தாக இருந்தாக இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். 
                                               

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

மொரினாவில் உள்ள கணேஷ்புரத்தில் பப்பு கவடியா என்பவர் தனது மனைவி அமீனாவுடன் ஒரு குடியிருப்பில் வசித்து வருகின்றார் அதே குடியிருப்பில் வசித்துவந்த 14 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்

இந்நிலையில் வீட்டிற்க்கு சென்ற மாணவிக்கு பலகாரத்தில் மயக்கமருத்து கொடுத்து மாணவியை முதலில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்த மாணவி தனது வீட்டிற்க்கு சென்றுவிட்டாள். அதன்பின்னர் மாணவியை ஆசைவார்த்தை கூறி அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று பப்புகவுடியா மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து மூன்று மாதங்களாக மாணவியை பப்புகபாடியா. பலாத்காரம் செய்துவந்துள்ளார். இந்நிலையில் வயிறு பெரிதாகிக்கொண்டே வந்ததால் அவரின் பெற்றோர் சந்தேகப்பட்டு விசாரித்தனர். அப்போது தான் பப்புகபாடியாவின் விஷமத்தனம் வெளியே தெரிந்தது மருத்துவப் பரிசோதனையில் மாணவி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த் புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்த போலீசார் பப்புகவாடியா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி அமினா மீது குழந்தைகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் அவர்களை கைது செய்தனர்.