மங்கல்யான் விண்கலம் 200வது நாளாக வெற்றி பயணம்

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் மற்றும் தண்ணீர் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம், 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 
                                  

டிசம்பர் 1ம் தேதி மங்கல்யான் புவி வட்டப்பாதையில் இருந்து விலகி செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது நீண்ட தூர பயணத்தை தொடங்கியது. மங்கல்யான் தனது பயணத்தை துவங்கி இன்றுடன் 200 நாள் நிறைவடைகிறது. தற்போது வரை எந்த பிரச்னையும் இல்லாமல் அதன் பயண தூரத்தில் 60 சதவீதத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. இது குறித்து இஸ்ரோவின் இயக்குனர் டேவிட் பிரசாத் நேற்று அளித்த பேட்டியில் ‘‘மங்கல்யான் தனது பயண தூரத்தில் 60 சதவீதத்தை கடந்துள்ளது. அதாவது 42 கோடி கிமீ தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் அதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்’’ என்றார்.