23 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரபூர்வ எதிர் கட்சி தலைவர் இல்லாத மக்களவை அமைய உள்ளது

மக்களவை தேர்தலில் தனிபெரும்பான்மை பெற்று பாரதி ஜனதா கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. 10 ஆண்டுகளாக ஆளுங் கட்சியாக இருந்த காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படு தோல்வியை சந்தித்துள்ளது . 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் எதிர்கட்சி தலைவர் பதவியை பெருவதற்க்கு 10 சதவிதம் இடங்களான 54 உறுபினர்கள் தேவை ஆனால் காங்கிரஸ் உட்டபட எந்த கட்சிக்கும் 54 உறுப்பினர்கள் இல்லாததால் எதிர்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்று கேள்ளவி எழுந்துள்ளது.                                             
 காங்கிரஸ்க்கு அடுத்தப்படியாக அதிமுகவுக்கு 37 உறுப்பினர்களும் , மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்க்கு 34 உறுப்பினர்கள் உள்ளதால் இரு கட்சிகளும் இணைந்து எதிர் கட்சி தலைவர் பதவியை பெற முயற்சிகள் மேற்கொள்ளும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.