2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு

உஸ்காய்த் பகுதியில் உள்ள காத்ரா கிராமத்தில் 14 மற்றும் 15 வயது கொண்ட இரண்டு சிறுமிகளை கடந்த செவ்வாய்கிழமை காணவில்லை. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை ஏற்றுக் கொள்ள போலீசார் அப்போது மறுத்துள்ளனர். இந்நிலையில் சிறுமிகள் இருவரும் கொடூர கும்பலால் கற்பழிக்கப்பட்டு கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று கண்பிடிக்கப்பட்டுள்ளனர்.
                                     
போலீஸ் அதிகாரிகளின் அக்கறையின்மையினாலே இந்த கொடூர செயல் நடத்துள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தியதை அடுத்து போலீசார் 7 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸ் கான்ஸ்டபிள் சார்வேஷ் யாதவ் மற்றும் ராக்‌ஷாபால் யாதவ் ஆகியோருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கும்பலில் ஒருவனான பாபு யாதவை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டனர் என்று போலீஸ் அதிகாரி மான் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

சிறுமிகள் கொலை செய்யப்பட்ட தகவல் அப்பகுதிகளில் பரவியதை அடுத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு நிலை சீர்படுத்தப்பட்டது. சிறுமிகள் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக கற்பழிக்கப்பட்டுள்ளனர் என்று கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுமிகளின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.