ஆசிரியையை குத்திக் கொன்ற வழக்கில் மாணவனுக்கு 2 ஆண்டுகள் சிறை

வகுப்பறையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் 9ம் வகுப்பு மாணவனுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
                                         

கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை பாரிமுனையில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வகுப்பறையில், ஆசிரியை உமா மகேஸ்வரி, 9ஆம் வகுப்பு மாணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். சென்னை சிறார் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, மாணவனுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.மேலும், சிறார் இல்லத்தில் மாணவனுக்கு போதிய வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.