30,000 பேரை வீட்டுக்கு அனுப்பிய நோக்கியா

இந்தியாவில் நோக்கியா நிறுவனம் 30 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கியதற்கு தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகத்திலேயே மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள ‘நோக்கியா’ நிறுவனத்தை விலைக்கு வாங்கிவிட்டது. மைக்ரோசாப்ட்-‘நோக்கியா’ ஒப்பந்தப்படி உலகளவில் கைப்பேசி தயாரிக்கும் உரிமம் ‘நோக்கியா’ நிறுவனத்திற்கு கிடையாது.
                                            102

எனவே ‘நோக்கியா’ நிறுவனம் இந்தியாவிலுள்ள தன் நிறுவனத்தை மூட முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் வாக்குப் பதிவு முடிவுற்றவுடன் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேரை முதல் வாரத்திலும், அடுத்த வாரத்தில் பயிற்சியாளர்கள் 6 ஆயிரம் பேரையும் வெளியேற்றின. ஆக ஒட்டுமொத்தமாக 30 ஆயிரம் தொழிலாளர்கள் சந்தடியின்றி சிறப்புப் பொருளாதார மண்டலத்திலிருந்து காலி செய்யப்பட்டுவிட்டார்கள். காலி செய்யப்பட்ட வெற்றிடத்தில் மார்க்சிஸ்ட் போராடப் போவதாக செய்திகள் வந்துள்ளன.

‘நோக்கியா’ நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தை இயங்கவிடாமல் செய்த அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கூட்டணியின் பின்னணி என்ன? என்பது புரியாமல் 30 ஆயிரம் பேர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். உள்நாட்டில் உற்பத்தியாகிய ‘நோக்கியா’ கைப்பேசியை குறைந்த விலையில் வாங்கியவர்களுக்கு, இனி அயல்நாட்டு கைப்பேசியை வாங்க நிர்ப்பந்திக்கும் நிலையினை அரசு ஏற்படுத்தியுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.