84 வயதுப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவரா பகுதியைச் சேர்ந்த 84 வயதுப் பெண் ஒருவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். மயக்க நிலையில் அவரது வீட்டில் கிடந்த அந்த மூதாட்டியை அவரது உறவினர் ஒருவர் மீட்டு, கொல்லம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்நிலையில், 

                                             
இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த மூதாட்டி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரத் தகவலை தெரிவித்துள்ளனர். இதனால் மருத்துவ மனை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.