காதலனை கொலைசெய்து படுக்கையில் மறைத்து வைத்த காதலியின் குடும்பத்தினர்

ஜெய்பூரை சேர்ந்தவர் மகேஷ் சைனி இவர் பாபுலால் என்பவரது மகளை காதலித்து வந்தார். காதலியிடம் நாம் திருமணம் செய்து கொள்வேன் என வற்புறுத்தி வந்தார். இவர்களது காதலுக்கு மகேஷ் வீட்டில் சம்மதம் தெரிவித்தனர் ஆனால் காதலி வீட்டில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏன் என்றால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

                                          

கடந்த சனிக்கிழமை பாபுலால் மகேஷை திருமண விஷயம் குறித்து பேச வேண்டும் என கூறி வீட்டிற்கு அழைத்து உள்ளார்.இதனால் மிகுந்த ஆவலுடன் மகேஷ் காதலியின் தந்தை வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு சென்றதும் மகேசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது காதலிக்கு அவரது தந்தை வேறு மணமகனை பேசி முடித்து உள்ளார். அவர்களது திருமணம் வருகிற மே மாதம் 2 ந்தேதி என முடிவாகி இருந்தது.

இதை அறிந்ததும் மகேஷ் காதலியின் தந்தையுடன் சண்டை போட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாபுலாலும் அவரது சகோதரரும் சேர்ந்து மகேஷை அடித்து சரமாறியாக தாக்கி உள்ளனர்.இதில் மகேஷ் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.உடனடியாக பாபுலாலும் அவரது சகோதரரும் மகேஷின் உடலை தங்களது படுக்கையில் மறைத்து வைத்தனர்

வெளியே சென்ற மகன் திரும்பவில்லையே என மகேஷின் பெற்றோர்கள் கவலை அடைந்து தேட தொடங்கினர் அவன் கடைசியாக காதலியின் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது உடனடியாக போலீசில் புகார் செய்தனர்.உடனடியாக போலீசார் பாபுலால் வீட்டிற்கு சென்று சோதனை, செய்தனர் சோதனையில் மகேஷின் பிணம் பாபுலாலின் படுக்கையில் மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதை தொடர்ந்து பாபுலாலையும் அவரது சகோதரரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.