மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட கணவர் கைது

திருச்சி விமானம் நிலையம் அருகே மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடன் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட கணவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

விமானம் நிலையம் அருகே உள்ள வயர்லெஸ் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ் (32). வேன் ஓட்டுநர். இவரது மனைவி ராஜலட்சுமி. தம்பதிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.இதனால் தம்பதிகளிடையே அவ்வப்போது தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ்சந்திரபோஸ் அதன் பிறகு வீட்டுக்கு வராமல் தலைமறைவானர். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சனிக்கிழமை காலை வீட்டிற்கு வந்த சுபாஷ்சந்திரபோஸ், தன்னுடன் வேலை பார்க்கும் எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள ராமச்சந்திர நகரைச் சேர்ந்த ரஹ்மத்ஷா(20) என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் தன்னை கொலை செய்துவிடுவதாகவும் மனைவி ராஜலட்சுமியிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜலட்சுமி பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திóல் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த போலீஸôர் சுபாஷ்சந்திரபோûஸ ஞாயிற்றுக்கிழை கைது செய்தனர்.