பலாத்காரத்தில் இருந்து காத்துத் கொள்ள போராடிய மாணவி மீது தீ வைப்பு

இந்தூர் அருகே உள்ள கர்கோன் பகுதியில் வசித்து வரும் மாணவியை சந்திக்க அவருடன் படிக்கும் கல்லூரி மாணவர்கள் மூவர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருப்பதை கண்ட அவர்கள் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். தன் மானத்தை காப்பாற்றிக் கொள்ள அந்த மாணவி போராடியுள்ளார். இதனால் கோபமடைந்த மாணவர்கள் மாணவி மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
                                              
இதனால் கோபமடைந்த மூவரும் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் அந்த மாணவி மீது தீ வைத்து எரித்துள்ளனர். மாணவி உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. உடனே அங்கிருந்து மூவரும் தப்பியோடிவிட்டனர். உடலில் 97 சதவிகிதம் தீயால் பாதிக்கப்பட்ட நிலையில் மாணவி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனைக்கு வந்த துணை கோட்ட நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்த மாணவி மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார். மாணவியின் வாக்குமூலத்தை தொடர்ந்து மூன்று மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பலத்த தீக்காயமடைந்ததால் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.