பலாத்கார காட்சியில் ரெய்மா சென் காயம்

பலாத்கார காட்சியில் நடித்தபோது காயம் அடைந்தார் ரெய்மா சென். தாஜ்மகால் பட ஹீரோயின் ரியா சென்னின் சகோதரி ரெய்மா சென். பாலிவுட் பட கதாநாயகி. தற்போது புதிய இந்தி படத்தில் நடித்து வருகிறார். வில்லன் நடிகர் தில்லோதமனுடன் ரெய்மா நடித்த பலாத்கார காட்சி படமாக்கப்பட்டது. 
                                                பலாத்கார காட்சியில் ரெய்மா சென் காயம்

ரெய்மாவை படுக்கையில் குப்புற தள்ளி அவர் மீது பாய்ந்த தில்லோத், அவரது தலைமுடியை பிடித்து இழுத்து கடுமையாக நடித்தார். வலி தாங்க முடியாமல் கதறினார் ரெய்மா. இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு நிலவியது. ஆனாலும் அவர் கதறுவது தத்ரூபமாக இருந்ததால் கட் சொல்லாமல் டைரக்டர் தொடர்ந்து ஷூட்டிங் நடத்தினார்.

காட்சி முடிந்ததும் ரெய்மா சென் அதிர்ச்சியுடன் பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, ‘Ôபலாத்கார காட்சியில் நடித்தபோது என் உடல் மீது கடல் அலைகள் ஆக்ரோஷமாக மோதியதுபோன்று இருந்ததால் பயந்துவிட்டேன். இதுவரை நான் நடித்த காட்சிகளிலேயே இதுதான் மிகவும் கடினமானது. முடியை பிடித்து இழுத்து வில்லன் நடிகர் ஆவேசமாக பாய்ந்தபோது வலி பொறுக்க முடியாமல் கதறினேன். 


இதுவும் அப்படியே படமாகிவிட்டது. உடலில் உள்காயங்கள் ஏற்பட்டனÕÕ என்றார். ‘Ôபலாத்கார காட்சிக்கு தயாராவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. பலாத்காரத்தின் கொடுமையை சித்தரிக்கவே இந்த காட்சி படமாக்கப்பட்டது. ஏனென்றால் தினம் தினம் அதுபோல் ஒரு சம்பவம் எங்காவது நடக்கிறதுÕÕ என்றார் வில்லன் தில்லோதமன்.