மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்: சோனியா காந்தி

பாரதீய ஜனதா கட்சி மக்களவை தேர்தலில் 282 இடங்களில் அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி 330 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது 


                                   

. இதையடுத்து நாட்டின் 14–வது பிரதமராக நரேந்திர மோடி நாளை  (26–ந் தேதி) மாலை 6 மணிக்கு பதவி ஏற்கிறார். தில்லியில் உள்ள குடியரசுத்லைவர் மாளிகையின் மைதானத்தில் இந்த பிரம்மாண்ட விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்குமாறு சார்க் நாடுகள் அனைத்துக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விழாவில் ஆப்கன் அதிபர் அமீத் கர்சாய், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இலங்கை அதிபர் ராஜபக்சே, நேபாள பிரதமர் கொய்ராலா, பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா, மோடி பதவி ஏற்பு விழா நேரத்தில் ஜப்பான் செல்வதால் அவரது சார்பில், அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் ஷிரின் சவுத்ரி பங்கேற்கிறார்.

இந்த விழாவில் பங்கேற்குமாறு மொத்தம் 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவில் முக்கிய உள்நாட்டு தலைவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்பதால் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசு தினத்திற்கு நிகராக உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.