குறைந்த அமைச்சர்கள், சிறந்த ஆட்சி நிர்வாகம்: மோடியின் திட்டம்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இன்று மாலை பதவியேற்க உள்ளது.'அமைச்சரவை மிகவும் சிறியாக இருக்கும். முந்தைய ஆட்சியில் இருந்தது போன்று, பெரியளவில் இருக்காது' என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.'அமைச்சர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல, சிறந்த ஆட்சி தான் முக்கியம். சிறிய அளவில் அமைச்சரவை இருந்தால் தான், நல்ல ஆட்சியை வழங்கமுடியும். இதற்காக பல்வேறு துறைகள் ஒன்றாக இணைக்கப்படும்' என மோடி கருதுகிறார்.
                                     

ஆட்சி நிர்வாக நடைமுறையிலும் மாற்றங்களை மோடி செயல்படுத்த உள்ளார். உதாரணமாக போக்குவரத்து துறையின் கீழ் கப்பல், நெடுஞ்சாலை, ரயில்வே ஆகியவற்றை ஒருங்கிணைக்கப்படும். ஒரு கேபினட் அமைச்சரின் கீழ், பல துறைகள் இணைக்கப்பட்டிருக்கும்.

சபாநாயகர் யார்: லோக்சபா சபாநாயகர்பதவிக்கு மூத்த தலைவர்கள் அத்வானி அல்லது முரளி மனோகர் ஜோஷி பெயர்கள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், சுமித்ரா மகாஜன் நியமிக்கப்படுவார் என தெரிகிறது.