திருமணத்திற்கு தயாராகும் சுப்ரமணியபுரம் புகழ் நடிகை!

நடிகை அமலா பாலை தொடர்ந்து ‘சுப்ரமணியபுரம்’ படப் புகழ் ஸ்வாதியும் திருமணத்துக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து, சினிமாவுக்கு வந்தவர் ஸ்வாதி. இவர், தமிழில் சுப்ரமணியபுரம் என்கிற படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கனிமொழி, போராளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
                              

விரைவில் திரைக்கு வரவிருக்கும் வடகறி படத்தில் ஜெய்க்கு ஜோடி இவரே. மேலும் ஸ்வாதி தெலுங்கில் ‘கார்த்திகேயா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஸ்வாதி, சென்னையை சேர்ந்த பிசின்ஸ் மேன் ஒருவரை திருமணம் செய்யவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஸ்வாதி தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.