கா‌ங்​கி​ர‌ஸ் க‌ட்சி வரலாறு காணாத வீழ்ச்சி!

வ​ரலாறு காணாத ‌தே‌ர்​த‌ல் ‌தோ‌ல்வி எ‌ந்​த​‌வொரு அர​சி​ய‌ல் க‌ட்​சி​‌யை​யு‌ம் நி‌லை​கு​‌லை​ய‌ச் ‌செ‌ய்​வ‌து இய‌ல்பு.​ ஆனா‌ல்,​​ கா‌ங்​கி​ர‌ஸ் க‌ட்சி அ‌ந்​த‌த் ‌தோ‌ல்​வி‌யை எதி‌ர்​‌கொ‌ள்​ளு‌ம் வித‌ம்​தா‌ன் ஆ‌ச்​ச​ரி​ய‌ப்​பட ‌வை‌க்​கி​ற‌து.​கா‌ங்​கி​ர‌ஸ் க‌ட்சி இ‌ந்​திய ஜன​நா​ய​க‌த்​தி‌ன் ‌வேரு‌க்கு வலி‌மை ‌சே‌ர்‌த்த ப‌ங்​க​ளி‌ப்​பு​க‌ள் ஏரா​ள‌ம்,​​ ஏரா​ள‌ம்.​ 


                                           
அ‌ப்​ப​டி‌ப்​ப‌ட்ட க‌ட்சி,​​ ம‌க்​க​ள​‌வை‌த் ‌தே‌ர்த​லி‌ல் படு​‌தோ‌ல்வி அடைந்​த​வு​ட‌ன்,​​ த‌ன்​‌னை‌ச் சுய பரி​‌சோ​த‌னை ‌செ‌ய்து கொள்​வ‌தை விடு‌த்‌து,​​ ‌பொறு‌ப்​பான எதி‌ர்‌க்​க‌ட்​சி​யாக எ‌ப்​படி ‌செய‌ல்​ப​டு​வ‌து எ‌ன்​ப​த‌ற்​கான ‌செய‌ல்​தி‌ட்​ட‌ங்​க‌ளை வகு‌க்க மு‌ற்​ப​டு​வ‌தை வி‌ட்டு,​​ அமை‌ச்​ச‌ர் ‌ஸ்மி​ருதி இரானி பி.ஏ.​ ப‌ட்​ட​தா​ரியா,​​ பி.கா‌ம்.​ ப‌ட்​ட​தா​ரியா,​​ அவ‌ர் தன‌து ‌து‌றை‌யை நி‌ர்​வ​கி‌க்​கு‌ம் திற​‌மை​யு‌ள்​ள​வரா இ‌ல்​‌லையா ‌போ‌ன்ற சி‌ல்​ல​‌றை‌ச் சி‌ல்​மி​ஷ‌ச் ச‌ர்‌ச்​‌சை​க​ளி‌ல் ஈடு​ப​டு​வ‌து மிக​வு‌ம் ‌துர​தி‌ர்‌ஷ்​ட​வ​ச​மா​ன‌து.​

சு​த‌ந்​திர இ‌ந்​தி​யா​வி‌ல் நட‌ந்த 16 ம‌க்​க​ள​‌வை‌த் ‌தே‌ர்​த‌ல்​க​ளி‌ல்,​​ இ‌ந்த அள​வு‌க்கு ‌மோச​மான ‌தோ‌ல்​வி​‌யை‌க் கா‌ங்​கி​ர‌ஸ் அடைந்​த​தி‌ல்‌லை.​ எதி‌ர்‌க்​க‌ட்​சி‌த் த‌லை​வ‌ர் பத​வி‌க்​கு‌த் தகுதி ‌பெறு​வ​த‌ற்​கான,​​ ம‌க்​க​ள​‌வை​யி‌ன் ‌மொத்த இட‌ங்​க​ளி‌ல் 10 விழு‌க்​காடு இட‌ங்​க​‌ளை‌க்​கூ​ட‌ப் ‌பெற முடி​யாத அள​வு‌க்​கு‌த் ‌தோ‌ல்​வி​‌யை‌த் தழு​வி​யி​ரு‌க்​கி​ற‌து.​ பிர​த​ம‌ர் தன‌து அமை‌ச்​ச​ர​‌வை​யி​லு‌ள்ள 10 மு‌க்​கி​ய​மான,​​ அனு​ப​வசாலி அமை‌ச்​ச‌ர்​க​‌ளை‌த் ‌தே‌ர்‌ந்​‌தெ​டு‌த்‌து,​​ "அர​சி​ய‌ல் பிர‌ச்​‌னை​க​ளு‌க்​கான அமை‌ச்​ச​ர​‌வை‌க் குழு'‌வை ஏ‌ற்​ப​டு‌த்​‌து​வா‌ர்.​ ம‌ன்​‌மோ​க‌ன் சி‌ங் அர​சி‌ன் இ‌ந்​த‌க் குழு​வி‌ல் இட‌ம்​‌பெ‌ற்ற 10 ‌பேரி‌ல் ஆறு ‌பே‌ர் ம‌ட்​டு‌மே ‌தே‌ர்த​லி‌ல் ‌போ‌ட்​டி​யி‌ட்​ட​ன‌ர்.​ ப.​ சித‌ம்​ப​ர‌ம் உ‌ள்​ளி‌ட்ட நா‌ன்கு ‌பே‌ர் ‌போ‌ட்​டி​யி​ட‌வே இ‌ல்‌லை.​ ‌போ‌ட்​டி​யி‌ட்ட ஆறு ‌பேரி‌ல் ஐ‌ந்‌து ‌பே‌ர் ‌தோ‌ல்​வி​‌யை‌த் தழுவி இரு‌க்​கி​றா‌ர்​க‌ள்.​

கா‌ங்​கி​ர‌ஸ் க‌ட்சி ‌வெ‌ற்றி ‌பெ‌ற்​றி​ரு‌க்​கு‌ம் 48 இட‌ங்​க​ளி‌ல் 35 இட‌ங்​க‌ளை ‌சோனியா கா‌ந்தி,​​ ராகு‌ல் கா‌ந்தி,​​ கம‌ல்​நா‌த்,​​ வீர‌ப்ப ‌மொய்லி,​​ ‌ஜோதி​ரா‌தித்யா சி‌ந்​தியா ‌போ‌ன்று அவ​ர​வ‌ர் ‌தொகு​தி​யி‌ல் தனி‌ப்​ப‌ட்ட ‌செ‌ல்​வா‌க்​கு‌ப் ‌பெ‌ற்​ற​வ‌ர்​க‌ள் ம‌ட்​டு‌மே ‌வெ‌ன்​றி​ரு‌க்​கி​றா‌ர்​க‌ள்.​ 2009இ‌ல் 29% இரு‌ந்த கா‌ங்​கி​ர‌ஸ் க‌ட்​சி​யி‌ன் வா‌க்​கு​வி​கி​த‌ம் 2014இ‌ல் 19.3% ஆக சரி‌த்​திர வீ‌ழ்‌ச்​சி‌யை ச‌ந்​தி​‌த்​தி​ரு‌க்​கி​ற‌து.​ அடு‌த்​த‌க்​க‌ட்ட ச‌ட்​ட‌ப்​‌பே​ர​‌வை‌த் ‌தே‌ர்​த‌ல்​க​ளு‌க்​கு‌ப் பிறகு,​​ ‌கேர​ள‌ம்,​​ க‌ர்​நா​ட​க‌ம் ‌போ‌ன்ற இர‌ண்டு மூ‌ன்று மாநி​ல‌ங்​க​ளி‌ல் ம‌ட்​டு‌மே கா‌ங்​கி​ர‌ஸ் ஆ‌ட்​சி​யி‌ல் இரு‌க்​கு‌ம் அவ​ல​நி‌லை ஏ‌ற்​ப‌ட்​டி​ரு‌க்​கி​ற‌து.​

கா‌ங்​கி​ர‌ஸ் க‌ட்​சி​யி‌ன் ‌தோ‌ல்​வி‌க்​கு‌ப் பல கார​ண‌ங்​க​‌ளை‌ப் ப‌ட்​டிய​லிட முடி​யு‌ம் எ‌ன்​றா​லு‌ம்,​​ மிக மு‌க்​கி​ய​மான கார​ண‌ம் அ‌ந்​த‌க் க‌ட்சி மு‌ற்​றி​லு​மா​க‌த் ‌தொ‌ண்​ட‌ர்​க‌ளை இழ‌ந்​‌து​வி‌ட்ட,​​ த‌லை​வ‌ர்​க‌ள் ம‌ட்​டு‌மே உ‌ள்ள க‌ட்​சி​யாக மாறி​வி‌ட்​டி​ரு‌ப்​ப​‌து​தா‌ன்.​ அ‌ந்​த‌த் த‌லை​வ‌ர்​க​ளு‌ம் சரி,​​ ‌நேரு குடு‌ம்​ப‌த்​தி‌ன் விசு​வா​சி​க‌ள் எ‌ன்​கிற நி‌லை​யி‌ல்,​​ க‌ட்​சி‌த் த‌லை​‌மை‌க்​கு‌த் ‌துதி​பா​டு​வ​த‌ன் மூல‌ம் பத​வி​யி‌ல் ஒ‌ட்​டி‌க் ‌கொ‌ண்​டி​ரு‌ப்​ப​வ‌ர்​க‌ள்​தா‌ன்.​ இ‌து​தா‌ன் கா‌ங்​கி​ரஸைப் பு‌ற்​று​‌நோ​யாக அரி‌த்‌து அழி‌த்​‌து‌க் ‌கொ‌ண்​டி​ரு‌க்​கி​ற‌து.​

த​ன‌து ‌தோ‌ல்​வி‌க்​கான நிஜ‌க் கார​ண‌த்‌தை வி‌ட்​டு​வி‌ட்டு,​​ யா‌ர் மீதா​வ‌து பழி சும‌த்​தி‌த் த‌ப்​பி‌த்​‌து‌க் ‌கொ‌ள்​ளு‌ம் ‌போ‌க்கு கா‌ங்​கி​ர​ஸி‌ன் வழ‌க்​க​மாகி வி‌ட்​டி​ரு‌க்​கி​ற‌து.​ 1996இ‌ல் ‌தோ‌ல்​வி‌க்​கான கார​ண​மாக நர​சி‌ம்​ம​ரா​வி‌ன் ‌பொரு​ளா​தார சீ‌ர்​தி​ரு‌த்​த‌க் ‌கொ‌ள்​‌கை​க​‌ளை‌க் கார​ண‌ம் கா‌ட்​டிய கா‌ங்​கி​ர‌ஸ் த‌லை‌மை,​​ இ‌ப்​‌போ‌து ம‌ன்​‌மோ​க‌ன் சி‌ங் மீ‌து பழி​சு​ம‌த்த மு‌ற்​ப​டு‌ம் எ‌ன்று நி‌ச்​ச​ய‌ம் ந‌ம்​பலா‌ம்.​

நூறு நா‌ள் ‌வே‌லை‌த் தி‌ட்​ட‌ம்,​​ உண​வு‌க்​கான உரி​‌மை‌த் தி‌ட்​ட‌ம்,​​ ‌நேர​டி​யாக மானி​ய‌ம் வழ‌ங்​கு‌ம் தி‌ட்​ட‌ம் ‌போ‌ன்​ற‌வை எ‌ல்லா‌ம்,​​ இல​வச விநி​‌யோ​க‌ம் ‌போல எ‌ந்​த​‌வொரு ஆ‌ட்​சி‌க்​கு‌ம் ‌கை‌கொ​டு‌க்​கா‌து எ‌ன்​ப​‌து​கூட நூ‌ற்​றா‌ண்டு க‌ண்ட கா‌ங்​கி​ர‌ஸ் க‌ட்​சி‌க்​கு‌த் ‌தெரி​யா​ம‌ல் ‌போன‌து விய‌ப்​பாக இரு‌க்​கி​ற‌து.​ அதே​‌போல,​​ வா‌க்​கு​வ‌ங்கி அர​சிய​லி‌ன் கால‌ம் முடி‌ந்‌து ‌போ‌ய்,​​ வள‌ர்‌ச்​சி‌யை மு‌ன்​னி​று‌த்​தி‌த் தி‌ட்​ட​மி‌ட்டு ‌செய‌ல்​ப‌ட்​டால் ம‌ட்​டு‌மே ம‌க்​க‌ள் ஆத​ரவு எ‌ந்​த​‌வொரு அர​சி​ய‌ல் க‌ட்​சி‌க்​கு‌ம் இரு‌க்​கு‌ம் எ‌ன்​ப‌தையும் கா‌ங்​கி​ர‌ஸ் த‌லை‌மை உணர மறு‌க்​கி​ற‌து.​ சிறு​பா‌ன்​‌மை​யி​ன‌ரை "‌மோடி,​​ ‌மோடி' எ‌ன்று பய​மு​று‌த்தி அவ‌ர்​க​ள‌து வா‌க்​கு​வ‌ங்​கி​‌யை‌க் குறி​‌வை‌த்​த‌து கா‌ங்​கி​ர‌ஸ்.​ "அனை​வ​ரு​ட​னு‌ம்,​​ அனை​வ​ரு​‌டைய வள‌ர்‌ச்​சி‌க்​கா​க​வு‌ம்' எ‌ன்​கிற ந‌ரே‌ந்​திர ‌மோடி​யி‌ன் ‌கோஷ‌த்​‌து‌க்கு மு‌ன்​னா‌ல் அ‌ந்​த‌ப் பூ‌ச்​சா‌ண்டி அடி​ப‌ட்​டு‌ப் ‌போ‌ய்​வி‌ட்​ட‌து.​

கா‌ங்​கி​ரஸைப் புன‌ர் நி‌ர்​மா​ண‌ம் ‌செ‌ய்​வ‌து எ‌ன்​ப‌து எளி​தா​ன​தாக இரு‌க்​க‌ப் ‌போவ​தி‌ல்‌லை.​ மு‌றை​யான உறு‌ப்​பி​ன‌ர் ‌சே‌ர்‌க்‌கை,​​ உ‌ள்​க‌ட்​சி‌த் ‌தே‌ர்​த‌ல் ஆகி​ய‌வை ஒரு​‌வே‌ளை அ‌ந்​த‌க் க‌ட்​சி‌யை மு‌ற்​றி​லு‌ம் அழி‌ந்​‌து​வி​டா​ம‌ல் கா‌ப்​பா‌ற்​ற‌க்​கூ​டு‌ம்.​ நிய​மன மு‌றை‌க்கு மு‌ற்​று‌ப்​பு‌ள்ளி ‌வை‌த்‌து,​​ கு‌றை‌ந்​த​ப‌ட்​ச‌ம் உட​ன​டி​யாக கா‌ங்​கி​ர‌ஸ் ‌செய‌ற்​கு​ழு​வு‌க்​கா​வ‌து ‌தே‌ர்​த‌லை நட‌த்​தி​னா‌ல்,​​ கா‌ங்​கி​ர‌ஸ் க‌ட்​சி‌யை அவ​சர சிகி‌ச்​‌சை‌ப் பிரிவி​லி​ரு‌ந்‌து,​​ ‌பொ‌து வா‌ர்​டு‌க்​கு‌க் ‌கொ‌ண்டு வரலா‌ம்.​ இ‌ல்​‌லை​‌யெ‌ன்​றா‌ல்,​​ 1885 டிச‌ம்​ப‌ர் 28ஆ‌ம் ‌தேதி ஆ‌ங்​கி​‌லே​ய​ரான ஆல‌ன் ஆ‌க்​‌டே​வி​ய‌ன் ஹூ​யூ​மா‌ல் ‌தொட‌ங்​க‌ப்​ப‌ட்ட இ‌ந்​திய ‌தேசிய கா‌ங்​கி​ர​ஸி‌ன் முடி​வு​‌ரை‌யை இ‌த்​தா​லி​ய​ரான ‌சோனியா கா‌ந்தி எழுத ‌நேரி​டு‌ம்!​