திருமணமானவர்கள் ஆபாச படங்களை பார்ப்பது விவாகரத்துக்கு வழிவகுக்கும்

ஆபாச படங்களை பார்ப்பது உங்கள் திருமணவாழ்க்கையை சீரழிக்கலாம் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று 551 திருமணமானவர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவை சமர்பித்துள்ளது.
                                                        

இந்த ஆய்வறிக்கையின் படி, ஆபாச படங்கள் பார்க்கும் ஆண்/ பெண் மேலும் ஒரு திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்து விடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபாச படங்களை பார்க்கும்போது கூடுதல் திருமணம் செய்யும் நிலையை நேர்மறையாக எண்ணும் மன நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த கூடுதல் திருமணம் செய்யும் எண்ணம் திருமணமானவர்களின் விவாரகத்துக்கு முக்கிய காரணியாக இருக்கும் என்று என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம்” கடந்த ஆண்டு நீங்கள் X தர மதிப்பீட்டு படங்களை பார்த்து உண்டா? திருமணமாணவர்கள் தனது பார்டனர் அல்லாது வேறு ஒருவருடன் உறவு வைத்துக்கொள்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கீறிர்கள்? இது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.இதில் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் கூடுதல் திருமணம் செய்வதற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.