ஃபேஸ்புக்கில் அதிகம் பகிர்ந்துகொள்பவர்கள் தனிமையில் வாடுபவர்களே!

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் தங்களது சொந்த விஷயங்களை அதிகமாக பகிர்ந்துகொள்பவர்கள் பெரும்பாலும் தனிமையில் வாடுபவர்களே என்று ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.
                                           

ஆஸ்திரேலியாவின் சார்ல்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், சமூக வலைத்தளங்களில் தங்களைப் பற்றின விஷயங்களைப் அதிகமாக பகிர்ந்துகொள்வதற்கும், தனிமையில் வாடுவதற்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்பது கண்டறிய வேண்டும் என்று முற்பட்டனர்.

இந்த ஆய்விற்காக, ஃபேஸ்புக்கின் பகிரங்கமாக தங்களது அக்கவுண்ட்டைப் பயன்படுத்தும் 600 பெண் பயனீட்டாளர்களின் பற்றிய விவரங்களை சேகரித்தார் அப்பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஏஸ்லாம் அல்-சக்கஃப்.

இதே நிலை, ஆண்களுக்கும் பொருந்தும் என்று தெரிய வந்துள்ளது. “நாங்கள் 308 பயனீட்டாளர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்தோம். அவர்கள் அனைவருமே தாங்கள் தனிமையில் வாடுவதாகவும், சமூக வலைத்தளங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது மூலம் தனிமையைப் போக்கிக்கொள்ள உதவுவதாகவும் கூறினர்” என்று ஏஸ்லாம் அல்-சக்கஃப். தெரிவித்தார்.

சராசரி நபர்கள் தங்களது சொந்த விஷயங்களை பகிர்ந்துகொள்வதை விட தனிமையில் இருப்பவர்கள் அதிக அளவில் பகிர்ந்துகொள்வதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

“தனிமையில் இருப்பவர்களில் 75 சதவீதப் பேர் தங்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள், புத்தகங்கள் போன்ற விவரங்களை அதிக அளவில் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால், இதுபோன்ற விவரங்களை சராசரி பயனீட்டாளர்கள் 65 சதவீதப் பேரே பகிர்ந்துகொள்கின்றனர்”, என்று அல்-சக்கஃப் தெரிவித்தார்.

மேலும், தனிமையில் இருப்பவர்களில் கிட்டதட்ட 98 சதவீதப் பேர் தங்களது உறவுகள் தொடர்பான நிலைத்தகவல்களைப் பகிரங்கமாக பகிர்ந்துகொள்கின்றனர். இதுபோன்ற செயல்கள், மற்றவர்கள் தங்களை தொடர்பு கொள்ளவேண்டும் என்றும், இதனால் தங்களின் தனிமை நிலையை போக்கிக்கொள்ள உதவுவதாகவும் அல்-சக்கஃப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்வில், சராசரி பயனீட்டாளர்கள் தங்களது அரசியல் மற்றும் மதம் தொடர்பான நிலைத்தகவல்களை பகிர்ந்துகொள்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், சராசரி பயனீட்டாளர்களை விடவும் தனிமையில் இருப்பவர்கள் தங்களது முகவரிகளை அதிக அளவில் பகிர்ந்துகொள்கின்றனர்.

இதுபோன்ற விவரங்களைப் பகிரங்கமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக்கொள்வதில் ஆபத்துகள் உள்ளன. தங்களது உறவு தொடர்பாக நிலைத்தகவல்கள், பிடித்தமான திரைப்படங்கள் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வதால், பலவிதமாக ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வு கட்டுரை, 'கம்யூட்டர் இன் ஹுமன் பிஹேவியர்' என்ற இதழில் வெளியாக உள்ளது.