அஜித் படத்தின் தலைப்பு இதுதானா!

வீரம்’ படத்தையடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிரார் அஜித்.இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பின் ஆரம்ப கட்டத்திலேயே அஜித் மோதும் சண்டைக்காட்சியைப் படமாக்கினார்கள்.
                                    

கெளதம் மேனனும் சிம்புவும் இணைந்திருக்கும் படத்தின் ஒளிப்பதிவாளர் டேன் மேகர்தர் தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடலாசிரியர் தாமரை இப்படத்தின் வசனங்களை எழுதுவதாகக் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ‘ஆயிரம் தோட்டாக்கள்’ என தலைப்பிடப்பட்டதாக ஏற்னெவே தகவல் வெளியானது. ஆனால் தற்போது படத்தின் தலைப்பு குறித்து மேலும் ஒரு செய்தி கசிந்துள்ளது.

இந்தப் படத்தில் அஜித் சத்யதேவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் எனவே அவரது கதாபாத்திரத்தின் பெயரையே படத்தின் தலைப்பாக வைக்க கௌதம் மேனன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும், டைட்டில் குறித்தும், வசனம் குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.