ஓய்வு பெறும் டோனி, கோஹ்லி: யார் அணித்தலைவர்?

ஐ.பி.எல் முடிந்ததும் இந்திய அணி, குறுகிய கால சுற்றுப்பயணமாக வங்காளதேசம் செல்கிறது.ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஜூன்  1 முடிவடைந்த பின்னர் வங்காளதேசம் செல்லும் இந்திய அணி, அங்கு டாக்கா நகரில்  ஜூன்  15, 17 மற்றும் 19 ஆகிய திகதிகளில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

                                                

பின்னர் யூன் மாத இறுதியில், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்று (5 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி) விளையாட இருக்கிறது.

இது இரண்டரை மாத காலம் நடக்கும் நீண்ட கால தொடராகும். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் கூறுகையில், இந்திய வீரர்கள் தற்போது வெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருவதால் அவர்களுக்கு கொஞ்சம் பயிற்சி கிடைக்கும் விதமாக இந்த தொடருக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும், அடுத்து கடினமான போட்டிகள் வருவதை கருத்தில் கொண்டு, வங்காளதேச தொடரில் அணித்தலைவர் டோனி, துணை அணித்தலைவர் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டோனி, விராட் கோலி இல்லாவிட்டால் அணிக்கு தலைமை தாங்குவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.