ஒரு தலை காதல்: திருமணமான பெண் துண்டு, துண்டாக வெட்டி கொலை

ஓருதலை காதலால் திருமணமான பெண்ணை துண்டு, துண்டாக வெட்டி கோணி பையில் கட்டி ஏரியில் வீசி சென்ற இளைஞரை போலீஸôர் தேடி வருகின்றனர்.போரூர் ஏரியில் கடந்த சனிக்கிழமை இரவு துண்டு, துண்டாக வெட்டபட்ட நிலையில் கை, கால்கள் மிதப்பதை கண்ட பொதுமக்கள் போரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 


சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது மிதந்து கிடந்த கை, கால்களுக்கு அருகே கோணிப்பையை கண்டெடுத்த போலீஸார் அதை பிரித்து பார்த்த போது அதில் 25 வயது மதிக்க தக்க பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின் இவற்றை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் இறந்து கிடந்த பெண் சென்னை, நெசப்பாக்கம், அன்னை சத்தியா நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் மனைவி ரேகா(25) என்பதும், இவர் கடந்த 1 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் 5 தனிப்படைகளை அமைத்து கொலைக்காண காரணம் குறித்து விசாரணை செய்துவந்தனர். இதில் கொலையான ரேகா கிண்டியில் உள்ள தனியார் கால் சென்டரில் வேலை செய்து வந்தார். இதே நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்த மாதவரம், சீத்தாபதி தெருவை சேர்ந்த சாம்சன்(25) என்பவர் ரேகாவின் திருமணத்திற்கு முன்பே ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ரேகா தான் காதலித்து வந்த ஸ்ரீராம் என்பரை இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த சாம்சன் கடந்த 1 ஆம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற ரேகாவை கடத்தி கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி உடலை கோணிப்பையில் வைத்து போரூரில் உள்ள ஏரியில் வீசி சென்றது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் ரேகாவை கொலை செய்து தலைமறைவாக உள்ள சாம்சன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.