ரஜினி வேடத்தில் பவர்ஸ்டார்

ரஜினி நடித்த பெயர்சொல்லும்படியான படங்களில் ஜானியும் ஒன்று. மகேந்திரன் இயக்கிய இப்படத்தில் ரஜினி சலூன் கடை வைத்திருப்பவராக நடித்திருந்தார்.இந்த வேடத்தில் ரஜினி நேர்த்தியாக நடித்திருந்தார்.
                                      

இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த அதே வேடத்தில் இப்போது பவர்ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறார். கிடாய் பூசாரி மகுடி என்ற படத்தில் நடிக்கும் அவர் ஜானியில் ரஜினி அணிந்தது போன்ற காஸ்ட்யூம்களையும் அணிந்து நடிக்கிறாராம். அதனால் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு இப்படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்திற்காக இளையராஜா அற்புதமாக பாடல்கள் அமைத்துக்கொடுத்திருக்கிறாராம். அதோடுமட்டுமல்லாமல் ஒரு பாடலையும் தானே பாடியுள்ளாராம் பவர்.