மீண்டும் இணையும் அஜித் - சுந்தர்.சி

உன்னைத்தேடி' வெளியாகி 15 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் அஜித் - இயக்குநர் சுந்தர்.சி இணைந்து பணியாற்ற திட்டமிட்டு இருக்கிறார்கள். கெளதம் மேனன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் அஜித், அதனைத் தொடர்ந்து இயக்குநர் (சிறுத்தை) சிவா இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். அதற்கான கதை விவாதத்தில் தற்போது இயக்குநர் சிவா ஈடுபட்டு வருகிறார்.
                                            

இந்நிலையில் நடிகை குஷ்பு நேற்று ட்விட்டர் தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் "அஜித் - சுந்தர்.சி இணைப்பில் படம் எப்போது?" என்று கேட்டதற்கு, குஷ்பு "விரைவில்..:)" என்று பதிலளித்து இருக்கிறார்.

ஏற்கனவே அஜித் - சுந்தர்.சி இணைந்து படம் பண்ண இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து இணைப்பிற்குரிய செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது அஜித் - சுந்தர்.சி இணைவதை குஷ்பு உறுதிப்படுத்தி இருப்பது அஜித் ரசிகர்கள் உற்சாகமாகி இருக்கிறார்கள்.