காதலித்து ஏமாற்ற முயற்சி இரு கிராம மக்கள் உதவியோடு காதலனை கரம்பிடித்த இளம்பெண்

நிலக்கோட்டை அருகே காதலித்து ஏமாற்ற முயன்ற வாலிபரை, இரு கிராம மக்களின் ஒத்துழைப்புடன் இளம்பெண் போராடி கரம்பிடித்தார்.திண்டுக¢கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அழகம்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் மீனா (24). பட்டதாரியான இவர், திருப்பூரில் பனியன் கம்பெனியில் சூபர்வைசராக பணிபுரிகிறார். 
                                            இதே கம்பெனியில், புதுசத்திரத்தை சேர்ந்த பாண்டி மகன் குமார் (24) பணிபுரிந்தார். இருவரும் ஒரு வருடமாக காதலித்தனர். குமார் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, மீனாவிடம் நெருங்கி பழகினார். திருமணம் செய்யுமாறு மீனா வற்புறுத்தவே, குமார் திடீரென மறுத்துவிட்டார்.

இதுகுறித்து நிலக¢கோட்டை அனைத்து மகளிர் போலீசில் நேற்றுமுன்தினம் மீனா புகார் அளித்தார். இதையறிந்த குமாரின் கிராமத்தினரும், மீனாவின் கிராமத்தினரும் காவல் நிலையத்தில் குவிந்தனர். இவர்கள் இப்பிரச்னை தொடர்பாக தங்களுக்கு பேசி தீர்வு காண போலீசிடம் அனுமதி கோரினர்.அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, இரு கிராம பெரியவர்களும் காவல் நிலையத்திற்கு வெளியே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு காதலர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்து, போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக காவல் நிலையம் அருகேயுள்ள துர்க¢கையம்மன் கோயிலில் மீனா - குமார் இடையே திருமணம் நடந்தது. காதலித்து ஏமாற்றிய வாலிபரை போராடி கரம் பிடித்த மீனாவையும், அதற்கு ஒத்துழைத்த இரு கிராம மக்களையும் போலீசார் பாராட¢டினர்.