வடிவேலுவுடன் இனி சேரவே மாட்டேன் சுந்தர்.சி சபதம்

சென்னை:‘கிரி படத்தில் ‘என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்டா, ‘தலைநகரம் படத்தில் ‘பில்டிங் ஸ்டிராங்... பேஸ்மென்ட் வீக்கு, ‘வின்னர் படத்தில் ‘இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிட்டிருக்கு.. போன்ற வசனங்களும் அந்த படங்களில் இடம்பெற்ற காமெடி காட்சிகளும் வடிவேலுவை டாப் கிளாஸ் காமெடியனாக மாற்றியது. இப்படங்களை சுந்தர்.சியுடன் இணைந்து அவர் செய்திருந்தார். 

                                                 வடிவேலுவுடன் இனி சேரவே மாட்டேன் சுந்தர்.சி சபதம்

இந்நிலையில் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்தனர். வடிவேலுக்கு பதிலாக தனது அடுத்தடுத்த படங்களில் சந்தானத்தை பிரதான காமெடியனாக ஒப்பந்தம் செய்தார் சுந்தர்.சி.‘கலகலப்பு படத்தில் அஞ்சலியின் முறைமாமனாக நடித்த சந்தானம். இப்போது சுந்தர்.சி இயக்கி நடிக்கும் ‘அரண்மனை படத்தில் பழைய நினைவுகளை மறந்துபோகும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

‘இப்படத்தில் வடிவேலு நடிப்பதாக முதலில் கூறப்பட்டதே என்று சுந்தரிடம் கேட்டபோது, ‘இதில் வடிவேலு நடிப்பதாக நான் எந்த நேரத்திலும் சொல்லவில்லை. இப்போதைக்கு அல்ல இனி எந்த படத்திலும் அவரை வைத்து இயக்க மாட்டேன் என்றார். சுந்தர்.சி இப்படி சொல்லும் அளவுக்கு இருவருக்கும் இடையே அப்படி என்ன பிரச்னை? என முணுமுணுக்கிறது கோடம்பாக்க வட்டாரம்.