எந்த வேடத்திலும் நடிக்க தயார் நயன்தாரா

எந்த வேடத்திலும் நடிக்க தயார் என்று நயன்தாரா அறிவித்து உள்ளார். சிம்புவுடன் இது நம்ம ஆளு, உதயநிதியுடன் நண்பேன்டா படங்களில் தற்போது நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாகவும் ஒப்பந்தமாயுள்ளார்.
                                              எந்த வேடத்திலும் நடிக்க தயார்: நயன்தாரா

தெலுங்கு, தமிழ் ரீமேக் ஆன இந்தி கஹானி படத்தில் நடித்தார். அது தற்போது இரு மொழிகளிலும் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படங்களை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டதாக நயன்தாரா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் தெலுங்கு பட உலகில் அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்ற பேச்சும் கிளம்பியது. தற்போது டைரக்டர், தயாரிப்பாளருடன் சமரசம் ஆகி உள்ளதாம்.

நயன்தாரா அளித்த பேட்டி வருமாறு:–

எனக்க கதாநாயகிக்கு முக்கித்துவம் அளிக்கும் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லை. அப்படி நடிப்பது ரொம்ப சிரமமானது. கதையின் மைய கருவே நாயகியை சுற்றித்தான் வரும். இதனால் கடுமையாக உழைக்க வேண்டும். மற்றவர்களை விட கதாநாயகிக்கே பொறுப்பும் அதிகம் இருக்கும். எல்லாவற்றையும் கதாநாயகி தோளில்தான் சுமக்க வேண்டும். இந்தியில் வந்த கஹானி படத்தை பார்த்த போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தின் ரீமேக்கில் மட்டும் நடிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டேன். இதில் நான் வித்யாபாலன், போல் கர்ப்பிணியாக நடிக்க வில்லை. டைரக்டர்தான் என் கேரக்டரை மாற்றினார்.

ஏற்கனவே ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் கர்ப்பிணியாகவும் இரு குழந்தைகளின் தாயாகவும் நடித்து இருக்கிறேன். என்னை பொருத்தவரை எந்த வேடம் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். நான் கமர்சியல் படங்களின் கதாநாயகி.

இவ்வாறு நயன்தாரா கூறினார்.