பாரதீய ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் அத்வானியுடன் சந்திப்பு

மக்களவை தேர்தலின் போது கருத்து வேறுபாடால் பர்மர் தொகுதியில் பாரதீய ஜனதா வில் இருந்து வெளியேறி சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் இன்று பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.                                            

ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் தொகுதியில் போட்டியிட ஜஸ்வந்த் சிங்கிற்கு வாய்ப்பு தர மறுத்த பா.ஜ.க அவருக்கு பதிலாக கர்னல் சோனரம் சவுத்ரியை நிறுத்தியது. இதை எதிர்த்து போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங் தோல்வி அடைந்தார்

இந்நிலையில் இன்று காலை அத்வானிக்கு இல்லத்திற்கு சென்ற ஜஸ்வந்த் சிங் அவரை சந்தித்து பேசியுள்ளார். இது பல்வேறு ஊகங்களை கிளப்பியுள்ளது.