கணவன், மனைவியாக வாழ்ந்தவர் பிரிந்தால் ஜீவனாம்சம் கட்டாயம்

கணவன், மனைவியாக சேர்ந்து வாழ்ந்தவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்தால் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேனியை சேர்ந்தவர் ஈஸ்வரி. வீரபாண்டியை சேர்ந்தவர் பாண்டியன். இருவரும் 1991ம் ஆண்டு முதல் கணவன், மனைவியாக இணைந்து வாழ்ந்தனர்.

                                   

பாண்டியன் திடீரென லாவண்யா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இதனால் ஜீவனாம்சம் கேட்டு ஈஸ்வரி, உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து ஈஸ்வரி மதுரை ஐகோர்ட்டில் மனு செய்தார். மனுவை நீதிபதி பிரகாஷ் விசாரித்தார். இருவரும் திருமண ஒப்பந்தம் செய்துள்ளனர். அதில், யார் பிரிய விரும்பினாலும் ரூ.40 ஆயிரம் தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இதனால் கீழ் கோர்ட் மனுவை தள்ளுபடி செய்தது தவறு. எனவே ஈஸ்வரிக்கு எவ்வளவு ஜீவனாம்சம் கொடுப்பது என்பது குறித்து உத்தமபாளையம் கோர்ட் முடிவு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.