iPhone 6 கைப்பேசியினை வாங்க விரும்புவோருக்கு ஓர் எச்சரிக்கை

ஆப்பிள்  நிறுவனத்தின் தயாரிப்பில் iPhone 6 ஸ்மார்ட் கைப்பேசியானது விரைவில் அறிமுகமாகவுள்ள நிலையில் அவற்றுக்கு போட்டியாக டம்மி iPhone 6 அறிமுகப்படுத்தப்படுகின்றன.தற்போது மற்றுமொரு டம்மி iPhone 6 தொடர்பில் தகவல்கள வெளியாகியுள்ளன.இவை நரைநிறம் (சாம்பல்), மற்றும் சில்வர் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
                                               
எனினும் அப்பிளானது 4.7 அங்குல அளவு, 5.5 அங்குல அளவுடைய திரையுடனும், அதி சிறந்த துல்லியமான கமெரா, iOS 8 இயங்குதளத்தினைக் கொண்டே தனது புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இவற்றினை அடிப்படையாகக் கொண்டு தற்போது வெளியிடப்பட்டுள்ள டம்மி கைப்பேசிகளை வேறுபடுத்தி இனங்காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.