Samxung Galaxy Mega 2 கைப்பேசியின் புகைப்படம் வெளியீடு

முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சம்சுங் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Galaxy Mega 2 இன் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.இக்கைப்பேசியானது 7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad Core Qualcomm Snapdragon 400 Mobile Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM, சேமிப்பு நினைவகமாக 8GB ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றவற்றினையும் கொண்டுள்ள இக்கைப்பேசி கூகுளின் Android 4.4 Kit Kat இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.