மற்றொரு குடும்ப நடிகை கவர்ச்சிக்கு தாவல்

லட்சுமிமேனனை தொடர்ந்து நெருக்கமான காட்சியில் நடிக்க தயார் என தெரிவித்திருக்கிறார் ரெஜினா. கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு ஆகிய படங்கள்வரை அடக்க ஒடுக்கமாக நடித்துக்கொண்டிருந்த லட்சுமி மேனன், நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்
                                            லட்சுமிமேனனை தொடர்ந்து மற்றொரு குடும்ப நடிகை கவர்ச்சிக்கு தாவல்

 லட்சுமி மேனனின் இந்த துணிச்சல், குடும்பப்பாங்காக மட்டுமே நடிப்பேன் என்று சொல்லிவந்த பல நடிகைகளை கவர்ச்சியாக நடிக்க தூண்டி இருக்கிறது. கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்திருந்த ரெஜினாவும், ஒருபோதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கண்டிஷன் போட்டு வந்தார். தற்போது அவர் பல்டியடித்து இருக்கிறார்.

குட்டையான ஆடை அணிந்து நடிப்பது, லோ ஹிப் உடை அணிவது போன்றவை எனக்கு பிடிக்காது. ஆனால் கதாபாத்திரத்துக்கு முக்கிய தேவை என்றால் நடிப்பேன். நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டிய சூழல் காட்சிக்கு தேவைப்படும் பட்சத்திலும் ஹீரோவுடன் நெருங்கி நடிக்கவும் தயார் என்றார்.

சக நடிகைகளின் கவர்ச்சி போட்டியால் தனது வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள இப்படி உல்டாவாகியிருக்கிறார் ரெஜினா என்று கோலிவுட்டில் முணுமுணுக்கின்றனர்.