SSLC தேர்வில் முதலிடம் பெற்ற 19 மாணவர்கள் விவரம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 26–ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9–ந் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11 ஆயிரத்து 552 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்து 38 ஆயிரத்து 462 பேர் எழுதினார்கள். இவர்களில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 462 பேர் மாணவர்கள். 5 லட்சத்து 8 ஆயிரத்து 414 பேர் மாணவிகள். 
 
                                          
இவர்கள் தவிர தனித்தேர்வர்கள் 74 ஆயிரத்து 647 பேர்கள். இவர்கள் தவிர சென்னை புழல் சிறை, திருச்சி மத்திய சிறை ஆகியவற்றிலும் உள்ள சிறைவாசிகள் 119 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்கள். மொத்தத்தில் 11 லட்சத்து 13 ஆயிரத்து 523 பேர் எழுதினார்கள்.

11 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவு காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. 19 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்

19 சாதனை மாணவ-மாணவர்களின் பெயர் மற்றும் அவர்களது பள்ளி விபரம் வருமாறு:-

1. ஆர்.அக்சயா-499, ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரி குலேசன், தர்மபுரி.
2. டி.என்.பஹீரா பானு- 499, அரசு உயர்நிலைப் பள்ளி பத்தமடை, நெல்லை மாவட்டம்.
3. ஏ.தீப்தி-499, செந்தில் மெட்ரிக்குலேசன், தர்மபுரி.
4. ஏ.தீப்தி-499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி.
5. எஸ்.காவ்யா-499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, கிருஷ்ணகிரி.
6. ஆர்.கயல்விழி-499, செந்தில்மெட்ரிக்குலேசன், தர்மபுரி.
7. என்.கீர்த்திகா-499, வான்மதி மெட்ரிக்குலேசன், கள்ளக்குறிச்சி.
8. ஜி.கீருத்திகா-499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி.
9. எம். மகேஷ் லக்ரு-499, பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை.
10. பி.மைவிழி-499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி.
11. பி.கே.ரேவதி அபர்னா- 499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி.
12. ஏ.சஞ்சனா-499, எஸ்.பி.எச். ஜெயின் பள்ளி, மேலூர், மதுரை.
13. எஸ்.இ.சந்தியா-499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி.
14. பி.எஸ்.சந்தியா-499, அனிதாகுமரன் மெட்ரிக் குலேசன் மேல்நிலைப்பள்ளி, தண்டுபத்து தூத்துக்குடி மாவட்டம்.
15. எம்.ஷரோன் கரீஷ்மா- 499, டாக்டர் ஆர்.கே.வி. மெட்ரிகுலேசன், சாத்தூர்.
16. ஆர்.ஸ்ரீவந்தனா-499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி.
17. ஆர்.ஸ்ரீரத்னாமணி-499, சத்ரிய பெண்கள் மேல் நிலைப்பள்ளி, விருதுநகர்.
18. எம்.சுப்ரிதா-499, பாரத் மான்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி, இலஞ்சி, தென்காசி.
19. எஸ்.வர்ஷினி-499, விவேகம் பெண்கள் உயர் நிலைப்பள்ளி, தாராபுரம், திருப்பூர்.