இன்று தல அஜித்துக்கு பிறந்த நாள்

தமிழகத்தில் தல என அழைக்கப்படும் நடிகர் அஜித்துக்கு இன்று பிறந்த நாள். உழைப்பாளர் தினமான மே 1ந் தேதி பிறந்து உழைப்பால் தமிழ் திரையுலகில் சாதனை படைத்துவரும் அஜித்துக்கு http://news.anbuthil.com/ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..

                                        இன்று தல அஜித் பிறந்த நாள்

அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அஜித், ஆசை படத்தில் நடித்த போது இளசுகளின் இதயத்தில் இடம்பிடித்தார். தொடர்ந்து காதல் கோட்டை, வான்மதி, உல்லாசம், காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ஆகிய வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் திரில்லர் படங்களில் தனது இன்னிங்ஸை துவக்கிய அவர் வாலி, தீனா, அமர்க்களம் ஆகிய படங்களில் நடித்து சாதனை படைத்தார். வரலாறு மற்றும் வில்லன் ஆகிய படங்களில் நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ளார்.

தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது, எம்.ஜி.ஆர். திரைப்பட விருது, பிலிம்பேர் விருது போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். எந்த வேடத்தையும் சவாலாக ஏற்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். போல் சிறப்பாக நடிப்பதில் வல்லவர். 'தல' அஜித்தும் புரட்சித்தலைவரின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது தனது ஜோடியாக நடித்த ஷாலினியை காதலித்த அஜித், பின் அவரை திருமணம் செய்துகொண்டார். தனது ரசிகர்கள் ரசிகர் மன்றங்களை தொடங்கக்கூடாது என்றும் முதலில் அவர்கள் தங்கள் தாய் தந்தையரை பார்க்கவேண்டும் என்று அவர்களை நல்வழிப்படுத்தியவர். தன்னிடம் வேலை செய்பவர்கள் கூட நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில் அவர்களுக்கு நிலமும் வாங்கிக்கொடுத்து அதில் வீடும் கட்டி கொடுத்த பரந்த மனம் கொண்டவர்.

யார் உதவி என்று கேட்டாலும் அதை பற்றி விளம்பரப்படுத்தி கொள்ளாமல் அவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து வருபவர். எந்த சமயத்திலும் யாரையும் காயப்படுத்தக்கூடாது என்ற மன உறுதி கொண்டவர். புரட்சித்தலைவரை போல் தனது அழகான சிரிப்பால் அனைவரும் நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பிடித்திருக்கும் 'தல' நூறாண்டுக்கு மேல் வாழ வாழ்த்துவோம்.