TNPSC VAO போட்டி தேர்வு எழுதப்போகிறீர்களா?

போட்டி தேர்வு எழுது அனைவருக்கும் வழங்கப்படும் முதல் அறிவுரை 5ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களை படியுங்கள் என்பது தான். இதெல்லாம் எனக்கு தெரியும். புத்தகங்களுக்கு எங்கே போவது? அவ்வளவு புத்தகங்கள் என்னிடம் வசதியில்லையே? எல்லா புத்தகமும் வாங்கிவிட்டேன், ஆனால் குறிப்பிட்ட இந்த வகுப்பு இந்த புத்தகம் மட்டும் கிடைக்கவில்லையே? இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேள்விகள் குழப்பங்கள். இனி அந்த கவலை வேண்டாம்.

                                                                    
                                       Government of Tamil Nadu, India - School Textbooks Online

                                             http://www.textbooksonline.tn.nic.in/ 


இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். 1ம் வகுப்பு முதல் 12வகுப்பு வரையிலான அனைத்து வகுப்பு பாடநூல்களும் Pdf வடிவில் கிடைக்கும். தமிழ், ஆங்கிலம், உருது, கன்னடம், தெலுங்கு, மலையாள மீடியத்தில் கிடைப்பது இதன் சிறப்பு. இனி மகிழ்ச்சிதானே!
                           நன்கு படியுங்கள்! தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!