விஜய் டி.வி. விருதுகள் நேயர்கள் தேர்வு செய்கிறார்கள்

விஜய் டி.வி.ஆண்டு தோறும் தங்கள் தொலைக்காட்சியில் பணியாற்றும் கலைஞர்களில் சிறந்தவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தனது நேயர்களிடம் விட்டிருக்கிறது. அவர்கள் தங்களுக்கு பிடித்த சீரியல் நடிகர், நடிகையோ, தொகுப்பாளர்களோ யாராக இருந்தாலும் அவர்களை குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். அதன்படி அனுப்பி வருகிறார்கள்.
                                            

வருகிற 17ந் தேதி இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியையும் நேயர்கள் கண்டு களிக்கலாம். விருது நிகழ்ச்சியோடு விஜய் டி.வி.கலைஞர்களின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.