மத்திய பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்

வரும் ஜூலை 10 ஆம் தேதி தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி. பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய டாப் 5 அம்சங்கள் இதோ

1. வருமான வரி விலக்கு உச்சவரம்பு: அருண் ஜேட்லி ஏற்கெனவே இது குறித்து தெரிவித்தது என்னவெனில், வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சத்திற்கு அதிகரிக்க்ப்பவேண்டும் என்பதாகும். இதனை அவர் அறிவித்தார் வரி வலையிலிருந்து 3 கோடி மக்கள் விடுவிக்கப்படுவார்கள். நாட்டின் சம்பளப் பிரிவினருக்கு நிம்மதி அளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறார் ஜேட்லி என்பது முதல் அம்சம். ஏனெனில் பாஜக-வின் பெரும்பான்மை வாக்கு வங்கியாயிற்றே இது. | ஷிவ்குமார் புஷ்பகர்

2. வரிச் சீர்திருத்தங்கள்: 2009ஆம் ஆண்டிலிருந்து நேரடி வரி மசோதா நிலுவையில் உள்ளது. இந்த மசோதாவை அமல் செய்து இதன் மூலம் சில சீர்திருத்தங்களைச் செய்வது பாஜக-வின் நோக்கமாகும். ஆனால் பாஜக தனது தேர்தல் அறிக்கையில், பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. 

3. பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு: மே, 2014 நிலவரப்படி நாட்டின் பணவீக்க விகிதம் 8.28%. முந்தைய அரசின் வீழ்ச்சிக்கு விலை உயர்வுகளே முக்கியக் காரணம், மேலும் பதுக்கலை ஒழித்தால் பணவீக்கம் குறையும் விலையும் குறையும் என்று அருண் ஜேட்லி கூறிவருகிறார். இந்த விவகாரத்தில் அரசின் மீது பெரும் எதிர்பார்ப்பு காத்திருக்கும் நிலையில் ஜேட்லியின் பட்ஜெட் என்ன செய்யப்போகிறது என்பது 3வது முக்கிய அம்சம்.

4. கருப்புப் பண விவகாரம்: அயல் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீண்டும் கொண்டு வருதல். இதற்காக சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கிக்கும் அருண் ஜேட்லி கடிதம் எழுதியுள்ளார். வரி ஏய்ப்பு மற்றும் நாட்டைப் பொருளாதாரச் சீரழிவிற்கு இட்டுச் செல்லும் கருப்புப் பண விவகாரங்களுக்கு ஜேட்லியின் கொள்கை ரீதியான நடவடிக்கை என்ன என்பதும் இந்த பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சம். | படம்: வி.சுதர்சன்

5. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது நாடாளுமன்ற உரையில் "100 புதிய நகரங்கள்” என்று கூறினார். மேலும் கிராமங்களில் உயர்தர நெடுஞ்சாலை, அனைவருக்கும் வீடு, தடையற்ற, குறையற்ற மின்சாரம், அதிவேக ரயில்கள், சிறந்த வான் வழி மற்றும் தரைவழிப் போக்குவரத்து வசதிகள், என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். இதற்கெல்லாம் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும், அத்தனைக்கும் நிதி ஒதுக்கப்பட முடியுமா என்பது இந்த பட்ஜெட் எதிர்நோக்கும் அடுத்த முக்கிய அம்சமாகும். | விவேக் பிந்த்ரே