நான்கு நாள்களில் 11 லட்சம் 'லைக்'குகளை அள்ளியது பிரதமர் அலுவலகம்!

பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம், நான்கே நாள்களில் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட 'லைக்'குகளை அள்ளியது.இந்தத் தகவல், பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இன்று பகல் 2 மணி நிலவரப்படி, 12 லட்சம் லைக்குகளைத் தாண்டியிருக்கிறது.

                                

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் வல்லவர் நரேந்திர மோடி. பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் அலுவகத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தின் கவர் ஃபோட்டாவில் இவரது புகைப்படம் அப்டேட் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அடுத்த 4 நாள்களில் மட்டும் 11 லட்சத்துக்கும் மேலான லைக்குகளைப் பெற்றது, பிரதமர் அலுவலகத்தின் ஃபேஸ்புக் பக்கம்.

புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செய்தி, ஆயிரக்கணக்கான லைக்குகளையும், நூற்றுக்கணக்கான கருத்துகளையும் பெற்றது.

அந்த நிலைத் தகவலில், புகையிலைப் பொருள்களுக்கான வரியை மேலும் அதிகரிப்பதன் மூலம் புகைப் பழக்கத்தை மக்களிடையே கட்டுப்படுத்த முடியும், பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை விதிப்பது பலனளிக்கும் என்பன உள்ளிட்ட யோசனைகளும் கோரிக்கைகளும் இணையவாசிகளால் பகிரப்பட்டது.

பிரதமர் அலுவகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் சுமார் 14 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

மக்களுடன் தொடர்பில் இருக்க, சமூக வலைத்தளங்களை முழுமையாக பயன்படுத்துவது என, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இதைப் பின்பற்றும்படி, தனது அமைச்சரவை சகாக்களுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/PMOIndia