13 வயது மாணவி பலாத்காரம் - தாயும் உடந்தையாக இருந்த கொடுமை!

கோவையில் 13 வயது மாணவி ஒருவர் தனது தாயின் கள்ளக்காதலனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை அரங்கேறியுள்ளது. தலைமறைவான கள்ளக்காதலனையும், தாயையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை வெரைட்டிஹால் ரோடு பகுதியில் வசிக்கும் 35 வயது பெண் ஒருவரின் கணவர், மனைவியின் நடத்தை பிடிக்காமல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


 அந்த பெண், தன்னுடைய 13 வயது மகள் மற்றும் 2 மகன்களுடன் வீட்டில் வசித்து வருகிறார். மகள் 6வது வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில் மாணவியின் தாயாருக்கும், சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்த சக்திவேல் (45) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. சக்திவேல், நகைபட்டறையில் இருந்து வெளியேறும் கழிவு மண்ணில் இருந்து தங்க துகள் சேகரிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். 

பெண்ணின் கணவர் இறந்தபிறகு சக்திவேல் அந்த பெண்ணின் வீட்டில் கடந்த 2 மாதங்களாக தங்கி இருந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனிடையே, சக்திவேலின் பார்வை, கள்ளக்காதலியின் 13 வயது மகள் மீதும் விழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து மாணவி வீட்டில் தனியாக இருக்கும்போது சக்திவேல் சில்மிஷம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி இரவு அந்த பெண் தன்னுடைய ஒரு மகனை அழைத்துக்கொண்டு கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள வெளியூர் சென்றுவிட்டார்.

 வீட்டில் சக்திவேலும், மாணவியும் அவளது தம்பியும் இருந்தனர். இதுதான் சரியான தருணம் என்று காத்திருந்த சக்திவேல், நள்ளிரவில் 13 வயது மாணவியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதிகாலை 4 மணியளவில் மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதற்குள் சக்திவேல் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

 இது தொடர்பாக கோவை மேற்குப்பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் செய்தாள். இந்த புகாரின் பேரில் பாலியல் பலாத்காரம் மற்றும் சிறுமியை செக்ஸ் கொடுமைப்படுத்தி துன்புறுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சக்திவேலை தேடி வருகின்றனர். மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். மாணவியின் தாயும் தலைமறைவாக உள்ளதால் மற்ற இரண்டு ஆண் குழந்தைகளையும் காப்பகத்தில் சேர்க்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.