ஆகஸ்ட் 15-ல் அஞ்சான் படம் ரிலீஸ்

சூர்யா, சமந்தா, சூரி, வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'அஞ்சான்'. லிங்குசாமி தயாரித்திருக்கும் இப்படத்தினை யு.டிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.அஞ்சான்' படத்தின் இசையினை ஜூலை 17ம் தேதி வெளியிட இருக்கிறார்கள். படத்தின் ROUGH CUT ட்ரெய்லரை பார்த்து ஆர்யா பாராட்டு

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. 'அஞ்சான்' படத்தின் டீஸரை விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஜூலை 5ம் தேதி வெளியிட இருக்கிறார்கள். ஜூலை 17ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவினை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இது குறித்து யு.டிவி நிறுவனத்தில் தென்னந்திய மேலாளர் தனஞ்ஜெயன், "'அஞ்சான்' படம் வெளியீட்டு தேதி குறித்து யாரும் குழம்ப வேண்டாம். ஆகஸ்ட் 15ம் தேதி கண்டிப்பாக வெளிவரும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.

படத்தின் ROUGH CUT ட்ரெய்லரைப் பார்த்த ஆர்யா வெகுவாக பாராட்டினார். படம் வெற்றியடைய எங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்" என்று தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.