தயாரிப்பாளர்களுடன் ஆட்டம் போட்ட அஞ்சலி..பரபர படங்கள்!

ஆந்திர திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் பிரமுகர்களுடன் நள்ளிரவு மது விருந்தில் அஞ்சலி ஆட்டம் போடும் படங்கள் வெளியாகி பரபரப்பு கிளப்பியுள்ளன. அஞ்சலியைச் சுற்றி ஓயாத சர்ச்சைகள். ஒரு பக்கம் சொந்த வாழ்க்கைப் பிரச்சினை. இன்னொரு பக்கம் திரைத் தொழிலிலும் பிரச்சினை. தமிழில் நல்ல வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்த அவரால், ஒரு கட்டத்தில் சென்னையில் வசிக்க முடியாத சூழல்.இதனால் கடந்த பல மாதங்களாக ஹைதராபாதிலேயே தங்கிவிட்டார் அஞ்சலி. தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். ஒரு இடைவெளி விட்டு, தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஆனால் தனது படத்தில் நடிக்காமல் அவர் வேறு படங்களில் நடிக்கக் கூடாது என களஞ்சியம் மிரட்டி வருகிறார். இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் கில்டு ஆகிய அமைப்புகள் களஞ்சியத்துக்கு ஆதரவாக செயல்படுகின்றன. ஆனால் இதை எழுத்து மூலம் தந்தால் நீதிமன்றத்தில் மாட்டிக் கொள்வோம் என்பதால் வாய்மொழியாக டீல் செய்து வருகின்றனர்.

ஆனால் அஞ்சலி இதையெல்லாம் நினைத்து கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த ஒரு மதுவிருந்தில் விடியவிடிய ஆட்டம் போட்டுள்ளார் அஞ்சலி.

இந்த மது விருந்தில் பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் மற்றும் சில நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் இணைந்து அஞ்சலி ஆட்டம் போட்ட படங்கள் வெளியாக பரபரப்பைக் கிளப்பியுள்ளன.