பாடகியாக அறிமுகமாகும் லட்சுமி மேனன்

இயக்குநர் கண்ணன் இயக்கி வரும் 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகிறார் நடிகை லட்சுமி மேனன்.'கும்கி', 'பாண்டியநாடு', 'நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் லட்சுமி மேனன். அவர் நடிப்பில் 'ஜிகர்தண்டா', 'சிப்பாய்' ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்துவிட்டன. கார்த்தி நடிக்கவிருக்கும் 'கொம்பன்' படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.


இந்நிலையில் எப்போதுமே படத்தில் புதுக் குரலை அறிமுகப்படுத்தும் இசையமைப்பாளர் இமான், 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் லட்சுமி மேனனை பாடகியாக அறிமுகப்படுத்துகிறார். விமல், ப்ரியா ஆனந்த், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தினை இயக்குநர் கண்ணன் இயக்கி வருகிறார்.

இமான், இதற்கு முன்னர் சிவகார்த்திகேயன், ரம்யா நம்பீசன் (தமிழில் - ‘கலாச்சி ஃபை’ பாடல்) ஆகியோரை பாடகர்களாக அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இப்பாடலைத் தொடர்ந்து லட்சுமி மேனன் மற்ற படங்களிலும் பாடுவாரா என்பது போக போகத்தான் தெரியும்.