கணவரை என்கவுண்டரில் கொல்ல சதி

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, கருப்பத்தூரைச் சேர்ந்த பொன்மணி (27) தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா இவ்வாறு உத்தரவிட்டார்.

மனுவில், நானும், எனது கணவர் கோபாலகிருஷ்ணனும் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். எங்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். 2009 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் நடந்த ஒரு கொலை வழக்கில் எனது கணவரை போலீஸார் கைது செய்தனர். பின்பு, ஜாமீனில் வெளியேவந்து காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். அந்தச் சமயத்தில் எனது கணவர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கரூர் மாவட்டம், குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 

மேலும், கரூர் பசுபதிபாளையம் போலீஸார் தொடர்ந்து 8 திருட்டு வழக்குகளை எனது கணவர் மீது பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பசுபதிபாளையம், லாலாப்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் எனது வீட்டுக்கு அடிக்கடி வந்து எனது கணவர் குறித்து விசாரித்துச் செல்கின்றனர். எனது கணவரை போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனது கணவரை போலி என்கவுண்டர் மூலம் போலீஸார் கொலைசெய்யத் திட்டமிட்டுள்ளதைத் தடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இம் மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக போலீஸ் டி.ஜி.பி., கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.