பாடம் நடத்தவந்த வீட்டில் உல்லாசம்: மாணவியின் தாயார் வந்ததால் சிக்கிக்கொண்ட ஆசிரியர்

இங்கிலாந்தில் 16 வயது மாணவியை காதல் என்ற பெயரில் 35 வயது ஆசிரியர் ஒருவர், மாணவியின் வீட்டில் வைத்து பலாத்காரம் செய்தார். அப்போது மாணவியின் தாய் வந்ததால் வசமாக சிக்கினார்.

இங்கிலாந்தில் திருமணமான ஆசிரியர் ஒருவர், 16 வயது பள்ளி மாணவியின் வீட்டிற்கு சென்று பாடம் எடுத்துள்ளார். அங்கு அவரது பெற்றோர் இல்லாத நாட்களில் மாணவியை ஏமாற்றி உறவு வைத்துக்கொண்டார். இதனை அவ்வப்போது செய்து வந்துள்ளார்.

ஒரு நாள் தற்செயலாக மாணவியின் தாய் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது மகள் தலைகலைந்த நிலையில், ஒருவித பதட்டத்துடன் வீட்டைதிறந்துள்ளார். அப்போது மகளின் நடவடிக்கையை கண்டு சந்தேகப்பட்ட அவர், வீட்டின் படுக்கையறைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு கதவின் ஓரம் ஷூ இருப்தை கண்டுபிடித்தார்.

இதனையடுத்து அங்கு ஆசிரியர் மறைந்து இருப்பதை கண்டு அதிர்ந்த அவர், மகளை ஆசிரியர் பலாத்காரம் செய்ததை அறிந்தார். இதனையடுதது நடந்த சம்பவத்தை மகளிடம் விசாரித்து அவரது கணவனிடம் தெரிவித்தார்.

பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்த தம்பதிகள் தங்கள் மகளை பலாத்காரம் செய்த ஆசிரியரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியறுத்தினர். விரைந்து வந்த போலீஸார் ஆசிரியரை கைது செய்து வழக்கு தொடரந்தனர்.

இநத் வழக்கை விசாரித்த நீதிமனறம் மாணவியை பலமுறை ஏமாற்றி பலாத்காரம் செய்துள்ள குற்றத்திற்காக ஆசிரியருக்கு 14 மாதம் சிறைத்தண்டனை வழங்கியது. ஆசிரியர் 10 வருடங்களுக்கு பாலியல் குற்றவாளியாக கருதப்படுவார் என்றும், அவரை இரண்டாண்டுகளுக்கு தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், உத்தரவிட்டது. மேலும் 200 மணி நேரம் அவர் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்றும தீர்ப்பளித்தது