கால்பந்து திருவிழா ஸ்டேடியத்தின் சிறப்பு

உலக கோப்பை கால்பந்து திருவிழா வரும் 12ம்தேதி துவங்கி அடுத்த மாதம் 13ம்தேதிவரையில் பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது. மொத்தம் 12 நகரங்களிலுள்ள மைதானங்களில் வைத்து இப்போட்டுகள் நடைபெறுகின்றன. கால்பந்து ரசிகர்களுக்கு அந்த மைதானத்தின் தன்மை என்ன? அதில் எந்தெந்த அணிகள், எந்தெந்த தினத்தில் மோத உள்ளன என்பது குறித்த விவரத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பது இயல்பானதே. ரசிகர்களுக்காக,

சால்வடோர்

அரேனா போன்டே நோவா என்றழைக்கப்படும் ஸ்டேடியம் அமைந்துள்ள நகரம் சால்வடோர். இங்கு ஜூன் 13ம்தேதி ஸ்பெயினும், நெதர்லாந்தும், 16ம்தேதி ஜெர்மனியும் போர்ச்சுக்கலும், 20ம்தேதி சுவிட்சர்லாந்தும் பிரான்சும், 25ம்தேதி போஸ்னியாவும் ஈரானும் பலப்பரிட்சை நடத்த உள்ளன. ஜூலை 1ம்தேதி ஹெச் குரூப்பின் வெற்றியாளரும், ஜி குரூப்பில் 2ம் இடம் பிடித்த அணியும் மோத உள்ளன. ஜூலை 5ல் காலிறுதி போட்டி நடக்கிறது. 48ஆயிரத்து 747 ரசிகர் கொள்ளளவு கொண்ட இந்த மைதானம் 1951ல் கட்டப்பட்டது.

கியிபாவில் கோல் திருவிழா

அரேனா பன்டனல் என்ற பெயருள்ள இந்த மைதானம் அமைந்துள்ள நகரம் கியிபா. ஜூன் 13ம்தேதி சிலியும் ஆஸ்திரேலியாவும், 17ம்தேதி ரஷ்யாவும் தென்கொரியாவும், 21ல் நைஜீரியாவும் போஸ்னியாவும், 24ல் ஜப்பானும் கொலம்பியாவும் இந்த மைதானத்தில் களம் காண உளஅளன. 42ஆயிரத்து 968 ரசிகர்களின் கொள்ளளவு கொண்ட இந்த மைதாநம் இந்தாண்டுதான் கட்டப்பட்டது.

ரெசிபேயில் ரசிகர்கள் கூட்டம்

அரேனா பெர்னாம்புகோ என்ற மைதானம் அமைநத்துள்ள நகரம் ரெசிபே. ஜூன் 15ல் ஐவரி கோஸ்ட் மற்றும் ஜப்பான், 20ல் இத்தாலி மற்றும் கோஸ்டா ரிகா, 23ல் குரோசியா மற்றும் மெக்சிகோ, 26ல் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி மோதுகின்றன. ஜூன் 29ல் குரூப் டி வெற்றியாளரும், குரூப் ஹெச் பிரிவில் 2ம் இடம் பிடித்த அணியும் மோதுகின்றன. 48 ஆயிரத்து 849 ரசிகர்களை தாங்கும் இந்த ஸ்டேடியம் 1969ல் நிர்மாணிக்கப்பட்டது.

போர்டலேசாவில் புட்பால் விழா

ஈஸ்டாடியோ காஸ்டேலோ மைதானம் அமைந்துள்ள நகரின் பெயர் போர்டலேசா. ஜூன் 14ல் உருகுவே மற்றும் கோஸ்டா ரிகா, 17ல் பிரேசில் மற்றும் மெக்சிகோ, 21ல் ஜெர்மனி மற்றும் கானா, 24ல் கிரீஸ் மற்றும் ஐவரி கோஸ்ட், 29ல் குரூப் பி வெற்றியாளர் மற்றும் குரூப் ஏ பிரிவின் 2ம் இடம் பிடித்த அணிகள் மோதுகின்றன. ஜூலை 4ல் காலிறுதி போட்டியும் இங்கு நடக்கிறது. 64 ஆயிரத்து 846 ரசிகர்களை தாங்கும் இம்மைதானமும் இந்தாண்டுதான் நிர்மாணிக்கப்பட்டது.

நடால் நகரில் நட்சத்திரங்கள்

ஈஸ்டோடியா டாஸ் டுனாஸ் என்ற மைதானம் அமைந்துள்ள நகரம் நடால். ஜூன் 13ல் மெக்சிகோ மற்றும் கேமரூன், 16ல் கானா மற்றும் அமெரிக்கா, 19ல் ஜப்பான் மற்றும் கிரீஸ், 24ல் இத்தாலி மற்றும் உருகுவே அணிகள் இதில் மோதுகின்றன. 42 ஆயிரத்து 86 ரசிகர் கொள்ளளவு கொண்ட இந்த மைதானம் கடந்தாண்டு கட்டப்பட்டது.