அடக்க ஒடுக்கமாக வாழ மாட்டேன்: நீது சந்திரா நச்

ஆதி பகவன், யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. அவர் கூறியது: தமிழில் நிறைய படங்களில் நடிக்காதது ஏன் என்கிறார்கள். நடிப்பதுடன் நான் படங்களும் தயாரித்து வருகிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்கள் வரும்போது அதை ஏற்றுக் கொள்கிறேன். பிடிக்காத கதாபாத்திரங்களை ஏற்பதில்லை.


 ஒரு சூப்பர் ஸ்டார்போல்தான் என்னை எனது அம்மா எண்ணி வந்தார். அவரது எண்ணத்தை பூர்த்தி செய்ய முடிவு செய்தேன். பெண்கள் கவனம் செலுத்தாத மார்ஷல் ஆர்ட்ஸ் சண்டை பயிற்சி கலை கற்றேன். சர்வதேச அளவில் நடந்த மார்ஷல் ஆர்ட்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் 3 முறை பங்கேற்றிருக்கிறேன். 

ஒருமுறை ஜாக்கி சானிடம் விருதும் வாங்கி இருக்கிறேன். என் அம்மாவை கண்டால் எனக்கு பயம். அடிக்கடி அவர் என்னை அடக்க ஒடுக்கமாக வாழ வேண்டும். அதுதான் நமது கலாசாரம் என்பார். அந்த வகையில் பார்த்தால் நான் கலாச்சாரத்துடன் கூடிய பெண் அல்ல. பெண்களுக்கு நமது சமுதாயம் சில கட்டுப்பாடுகளை வகுத்து வைத்திருக்கிறது. அப்படி நடக்காவிட்டால் கலாசாரம் தெரியாதவள் என்று குற்றம் சாட்டுவார்கள். அதுபோன்ற கலாசாரத்தை என்னிடம் எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு நீது சந்திரா கூறினார்.