கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண், கல்லால் அடித்துக் கொலை

சிக்மகளூர் அருகே கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான அந்த பெண்ணின் கணவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

கள்ளத் தொடர்பு 

சிக்மகளூர் தாலுகா மல்லந்தூர் அருகே காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ். இவருடைய மனைவி நீலா(வயது 32). இந்த நிலையில் நீலாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.


இதையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியும், தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தும் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நீலாவின் கள்ளக்காதல் விவகாரம் சீனிவாசுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாஸ், நீலாவிடம் இன்னொரு வாலிபருடன் இருக்கும் கள்ளத் தொடர்பை கைவிடுமாறு பலமுறை கூறினார்.


கல்லால் அடித்துக் கொலை 


ஆனால் நீலா கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நீலாவும், அந்த வாலிபரும் அந்த பகுதியில் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்ததை சீனிவாஸ் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சீனிவாஸ் வேகமாக சென்று அருகில் கிடந்த கல்லை எடுத்து நீலாவின் தலையில் பலமாக தாக்கினார்.


இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நீலாவின் கள்ளக் காதலன் தப்பியோடினார். மேலும் மனைவியை கொலை செய்த பதற்றத்தில் சீனிவாசும் தலைமறைவானார்.


கணவருக்கு வலைவீச்சு 


இதுகுறித்து தகவலறிந்த மல்லந்தூர் போலீசார் விரைந்து சென்று நீலாவின் உடலை மீட்டு மல்லந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள சீனிவாசை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.