மருமகனால் கர்ப்பம்: மாமியார் தற்கொலை

மருமகனால் கர்ப்பம் அடைந்ததால் அவமானத்தில் அவரது சிறிய மாமியார் தற்கொலை செய்து கொண்டார்.திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் முத்தூர் மங்கப்பட்டி அருகே உள்ள முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து (57). இவரது இரண்டாவது மனைவி பழனியம்மாள் (36). இவரது முதல் முனைவி இறந்துவிட்டார்.


முதல் மனைவிக்குப் பிறந்தவர் சாந்தி (28). இவரின் கணவர் பாலசுப்பிரமணியன் (32). இவருக்கும் இவரின் சின்ன மாமியாருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதாம். இந்தத் தொடர்பால் பழனியம்மாள் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரிந்ததும், அவமானம் அடைந்த பழனியம்மாள், வெள்ளக்கோவில் கரூர் சாலையில் - கேவிபி நகரில் உள்ள மருமகன் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.