பாஜகவில் கூண்டோடு ஐக்கியமாகிறது மே.வங்க ஆம் ஆத்மி!!

ஆம் ஆத்மி கட்சியின் மேற்கு வங்கப் பிரிவு கூண்டோடு பாரதிய ஜனதா கட்சியுடன் இணைய இருக்கிறது. கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் நேற்று மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக தலைவர் ராகுல் சின்ஹா கூறியதாவது: மேற்கு வங்க ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பாரதிய ஜனதாவில் இணைவதற்கு முடிவு செய்துள்ளனர். 


அந்த கட்சியின் மேற்கு வங்க பிரிவு கூண்டோடு பாஜகவுடன் ஐக்கியமாகிறது. மேலும் பிற கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தலைவர்களும் பாஜகவில் இணைய இருக்கின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதாப் கோஷும் பாஜகவில் இணைய இருக்கிறார். இவ்வாறு ராகுல் சின்ஹா கூறினார். இதனிடையே ஆம் ஆத்மி தலைவர் மெகபூப் ஜெஃப்பெரி உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்த கையோடு அரவிந்த் கேஜ்ரிவால் மீது சரமாரி குற்றச்சாட்டுகளையும் சுமத்தியுள்ளனர்.