கருணாநிதியைச் சந்தித்தார் ரஜினிகாந்த்

கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை திடீரென சந்தித்தார்.இன்று காலை 10.50 மணி முதல் 11.10 மணி வரை இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.“கலைஞர் பிறந்த நாளன்று நான் ஐதராபாதில் இருந்தேன், அதனால் வாழ்த்துக் கூற முடியவில்லை. ஆகவே இன்று வாழ்த்துக்களைக் கூறினேன்.மேலும் கோச்சடையான் படத்தைப் பார்க்க வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொண்டேன்”என்று கூறினார் ரஜினிகாந்த்.