விஷாலுக்கு ஜோடியாகிறார் ஹன்சிகா

'அரண்மனை' படத்தினைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஹன்சிகாசுந்தர்.சி இயக்கத்தில் வினய், சந்தானம், ஹன்சிகா, லட்சுமி ராய், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'அரண்மனை'. இப்படத்திற்காக கிராபிக்ஸ் பணிகள் தற்போது படுதீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, விஷால் நடிக்கவிருக்கும் படத்தினை இயக்கவிருக்கிறார் சுந்தர்.சி. இப்படத்தினை விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கவிருக்கிறார். ஏற்கெனவே இருவரது இணைப்பில் தயாரான 'மதகஜராஜா' பல்வேறு பிரச்சினையில் வெளியாகமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது துவங்கி இருக்கிறார்கள். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் ஹன்சிகா. முதலில் 'பூஜை' படத்தில் ஸ்ருதிஹாசன் வேடத்தில் ஹன்சிகா தான் நடிப்பதாக இருந்தது. தேதிகள் ஒத்துவராத காரணத்தினால் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

தற்போது விஷாலுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமன்றி, சுந்தர்.சி இயக்கத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது படத்தில் நடிக்க இருக்கிறார் ஹன்சிகா.

இப்போதைக்கு 'ரோமியோ ஜுலியட்', விஜய் - சிம்புதேவன் இணையும் படம், விஷால் -சுந்தர்.சி இணையும் படம் என ஹன்சிகாவி கால்ஷீட் அடுத்த வருடம் வரை இல்லையாம்.