வேதாரண்யம் அருகே மதுபானத்தில் பல்லி

வேதாரண்யம் தாலுகாவில் 29 அரசு மதுபான கடைகள் உள்ளன. இதில் தோப்புத்துறையில் உள்ள அரசு மதுபான கடையில் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனத்தை சேர்ந்த முரளிராஜன் என்பவர் 2 குவாட்டர் பாட்டில்களை வாங்கி உள்ளார். 

வீட்டில் சென்று தனது நண்பர்களுடன் மது அருந்த பாட்டிலை எடுத்து பார்த்த போது அதில் பல்லி இருந்தது தெரியவந்தது. மறுநாள் மதுபான கடைக்கு சென்று விற்பனையாளரை கேட்ட போது இது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக முரளிராஜன் டாஸ்மார்க் அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார். மேலும் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார்.